BSNL-ன் 26-வது நிறுவன தினக் கொண்டாட்டம்
ரவீந்திர பிரசாத், முதன்மை பொது மேலாளர், பி.எஸ்.என்.எல்., சேலம் அவர்கள், 01.10.2026 இன்று BSNL-ன் 26-வது நிறுவன தினக் கொண்டாட்டம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
சேலம் அக் 2 பி.எஸ்.என்.எல் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது 26-வது நிறுவன தினத்தை இன்று, 01.10.2026 அன்று, சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடுகிறது.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சேலம் வணிகப் பகுதியில் BSNL சார்பில் 200 மெகா SIM மற்றும் FTTH மேளாக்கள் நடத்தப்பட்டன. இம்மேளாக்களில் BSNL மொபைல் SIM செயல்படுத்துதல், FTTH (Fiber To The Home) வாடிக்கையாளர் இணைப்புகளை அதிகரித்தல் மற்றும் BSNL திட்டங்கள்/சேவைகளை விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நிறுவன தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, BSNL தனது பிரபலமான “Freedom 2.0” சிறப்பு விளம்பரச் சலுகையை நீட்டித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் ₹1-க்கான இலவச SIM சலுகை, தற்போது 12.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையின் மூலம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4G தொழில்நுட்பத் தொகுப்பின் (Indigenous 4G Stack) ஆதரவுடன் BSNL-ன் 4G மொபைல் சேவையை 24 நாட்களுக்கு பயன்படுத்தி அதன் சேவைத் தரத்தை அனுபவித்து அறிய முடியும்.
BSNL தனது பிரபலமான FRC 51 சலுகையையும் 31.10.2026 வரை நீட்டித்துள்ளது. FRC 51 திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு, வரம்பற்ற குரல் அழைப்புகள், நாளொன்றுக்கு 2 GB தரவு மற்றும் நாளொன்றுக்கு 100 SMS வழங்கப்படுகின்றன. மேலும், BSNL 03.10.2026 முதல் STV 349 திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு, வரம்பற்ற குரல் அழைப்புகள், 300 GB தரவு மற்றும் நாளொன்றுக்கு 100 SMS வழங்கப்படும். இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்