அரசனூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம்
அரசனூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம்:
சிவகங்கை:அக்:03
சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சி செம்பூர் காலணி கிராமத்தில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நோக்கம் மத்திய மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கண்மாய் தூர் வருதல், கால்வாய் அமைத்தல் மற்றும் நூலகம் அமைத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பல துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தினை அரசனூர் ஊராட்சி செயலர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.