Loading...

கமலம் கார்னிவல் -2026 எம்மிமல் விருதுகள் வழங்கும் விழா

A

Admin

October 02, 2026 • 05:59 AM

கமலம் கார்னிவல் -2026  எம்மிமல் விருதுகள் வழங்கும் விழா

கமலம் கார்னிவல் -2026 எம்மிமல் விருதுகள் வழங்கும் விழா.


சேலம் அக் :3


சேலம் சி.எஸ்.ஐ கிறிஸ்து தேவாலய வளாகம், போர்ட் பாரிஸ் ஹாலில், கமலம் கார்னிவல் - 2026 , எம்மிமல் விருதுகள்- 2026 வழங்கும் விழாவினை, எம்மி கார்டன் மறுவாழ்வு அறக்கட்டளை - சேலம். மற்றும் டெய்லி ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்., நிர்வாக தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், கிருஷ்ண பிரியா தலைமை நீதித்துறை நடுவர், சேலம் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி எம்மீஸ் கார்டன் சாரிட்டபிள் டிரஸ்ட் செகரட்டரி ஹேமா பிரைட் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எம்மீஸ் சிறப்புப்பள்ளி மற்றும் கமலம் மறுவாழ்வு மையத்தின் முதல்வர் ஹெலன் சோபியா நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர். கமலம் கார்னிவல் - 2026 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், அனைத்து சிறப்பு குழந்தைகள், சிறப்பாசிரியர் உதவியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -