சட்ட விரோத பண பரிமாற்றமா
சட்ட விரோத பண பரிமாற்றமா?
முன்னாள் அமைச்சர் மகன் மீது சிவகங்கை போலீஸ் எஸ்.பி யிடம் புகார்.
சிவகங்கை:அக்:23
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன் கோட்டையை அடுத்துள்ள வெட்டிக்குளம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி ( 64).
இவர் தற்போது சிவகங்கையில் குடியிருந்து வருகிறார். இவர் முன்னாள் திமுக அமைச்சர் கண்ணப்பன் அவர்களின் மகன் திலீப்குமார் என்பவர் மீது சிவகங்கை போலீஸ் எஸ்.பி. யிடம் குடும்பத்துடன் வந்து புகார் மனு கொடுத்தார். பின்பு இவர் செய்தியாளர்களை சந்திப்பதற்காக வெளியில் வந்தார். அப்போது இவரின் மனைவி ஈஸ்வரி என்பவர்... எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அமைச்சரின் மகன் அதிகாரத்தை பயன்படுத்தி எங்களது சொத்தை எழுதித்தாருங்கள் என மிரட்டி வருகிறார். எனவே நான் சாகப் போகிறேன் என்று சொல்லி விட்டு மறைத்து வைத்திருந்த ஏதோ ஒரு விஷ மருந்தை எடுத்து வேகமாக குடித்துவிட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அங்கிருந்த போலீசார் மயங்கி விழுந்த ஈஸ்வரியை தூக்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். புகார் மனுவில் கூறியிருந்ததாவதுஎனது மகன் ஹரிஆகாஷ்கோகுல் (26) என்பவர் இன்ஜினியருக்கு படித்துள்ளார். இவர் திலீப்குமாரின் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். அப்போது வங்கிக் கணக்கில் முறையாக வராத சட்ட விரோத பணங்களை அமைச்சரின் மகன் போட்டுவிட்டு அதை பின்னர் எடுத்து அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பட்டுவாடா செய்யுமாறு கூறியுள்ளார். இதை மறுத்துவிட்டு எனது மகன் வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியில் வந்து விட்டார்.
இதனால் சில ரகசியங்கள் தெரிந்துவிடும் என்று வேலையை விட்டுப் போனால் உன் மீது புகார் மனு கொடுப்பேன். எனது அரசியல் பலத்தால் உனது குடும்பத்தை அழித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர் எனது மகனை கட்டாயப்படுத்தி காரைக்குடிக்கு வரச் செய்து அடித்து துன்புறுத்தி வெற்றுப் பேப்பர்களில் கையொப்பம் வாங்கி விட்டு டச்சு போனில் உள்ள சிம்கார்டையும் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் என்னையும் கடத்தி மதுரைக்கு கொண்டு சென்று அடித்து துன்புறுத்தி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டார்கள். இது போன்ற பொய்யான டாக்குமெண்ட்களை வைத்து காவல் நிலைய அதிகார வரம்பு எல்லைகளையும் மீறி சட்டவிரோதமாக சிவகங்கை டவுன் காவல் ஆய்வாளர் அருள்ப்பிரகாசம் அவர்கள் என் மகன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளார். இப்போது அமைச்சரின் மகன் 70- லட்சம் தருமாறு ஆட்களை எனது வீட்டுக்கு அனுப்பி வருகிறார். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.