சிவகங்கை அருகே குயிலி பிறந்த ஊரில் 246 - வது நினைவேந்தல்.
சிவகங்கை அருகே
குயிலி பிறந்த ஊரில்
246 - வது நினைவேந்தல்.
சிவகங்கை:அக்:21
சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனியை அடுத்துள்ளது குடஞ்சாடி கிராமம். சுதந்திரப் போராட்ட முதல் பெண் வீராங்கனை ராணி ராணிவேலுநாச்சியாரின் உற்ற தோழியாகவும் போர்ப்படை தளபதியாகவும் இருந்தவர் குயிலி ஆவார். இவர் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனியை அடுத்துள்ள குடஞ்சாடி கிராமம் என்று கூறப்படுகிறது.
இந்த கிராமத்தில் வீரத்தாய் குயிலி வம்சாவளிகள் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவு அறக்கட்டளையின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கரிசல் சு. கணேசன் அவர்களின் ஏற்பாட்டில் குடஞ்சாடி கிராமத்தில் உள்ள குயிலின் நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் குடஞ்சாடி சோனை முத்து . கரிசல்குளம் பால்கன், நாகராஜன் ,தினேஷ் குடும்பம் ,மற்றும் மானாமதுரையில் உள்ள முக்கியஸ்தர்கள் குடஞ்சாடி கிராமத்தைச் சேர்ந்த கிராம தலைவர் பாலமுருகன் ஆனைக்குளம் அய்யனார் வீரத்தாய் குயிலி பெண்கள்முன்னேற்ற அறக்கட்டளை, மாமன்னன் ஒண்டிவீரன் வாரிசு ஆறுமுகம் ,சமூக விடுதலை முன்னணி தலைவர் ராஜசேகர் , விடுதலை வீரன் ஆதி தமிழர் விடுதலைக் கட்சி தலைவர் என்.பி ஆறுமுகம் மற்றும் குடஞ்சாடி கிராம மக்கள் திரளாகப் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.