Loading...

சிவாஜிகணேசன் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி . தென்னக திரையுலக சிவாஜி பேரவை ஏற்பாடு.

A

Admin

September 29, 2026 • 12:57 PM

சிவாஜிகணேசன் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி . தென்னக திரையுலக சிவாஜி பேரவை ஏற்பாடு.

சிவாஜிகணேசன் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி .
தென்னக திரையுலக சிவாஜி பேரவை ஏற்பாடு.

சிவகங்கை: செப்:30
சிவகங்கை நகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் தென்னக திரையுலக நடிகர்திலகம் சிவாஜி பேரவை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களது பேச்சுப்போட்டி நடைபெற்றது.
சிவாஜி பேரவைத் தலைவர் தமிழரசன் , செயலாளர் பூக்கடை பாண்டியன் , பொருளாளர் பாலகுரு , ஒருங்கிணைப்பாளர் ஆதவன் ரவி ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி , சட்டமன்ற மேனாள் உறுப்பினர் எஸ். மாங்குடி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், சோழபுரம் ரமணவிகாஷ் , தேவகோட்டை தே பிரிட்டோ , சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி , சிவகங்கை புனித சூசையப்பர் பள்ளி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் போடடியில் கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றிய சிறப்புகளை எடுத்துப் பேசினர்.

இறுதியில் முதல்பரிசை சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் , இரண்டாம் பரிசை ஆண்டிச்சியூரணி சரஸ்வதி வித்யாலயா பிரதக்ஷணா , மூன்றாவது பரிசினை புனித சூசையப்பர் பள்ளி அழகுமணீஷ் என்ற மாணவரும் பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.
இதில் காங்கிரஸ் கட்சி மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி , பேச்சாளர் சிங்கைதர்மன் , பொதுக்குழு உறுப்பினர் அரிமா வித்யாகணபதி , குமரன் மெஸ் சிதம்பரம் , சண்முகராஜன் , சையது இபுறாஹீம் , கவுன்சிலர் மகேஷ்குமார் , வட்டாரத் தலைவர் மதியழகன் , முத்துராஜா , சுசீலா பாலகுரு , லெட்சுமணன் , சிவாஜி பேரவை ராஜூ , ஆலோசகர்களான பாலசுப்பிரமணியன் , காளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளையும் , சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகளையும் வழங்கினர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் ,
மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவாஜி பேரவைத் தலைவர் தமிழரசன் , செயலாளர் பூக்கடை பாண்டியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

- Advertisement -