செம்போடை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழா
முப்பெரும் விழா
செம்போடை செப் 30
செம்போடை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழா
தலைமையாசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார் .
முன்னாள் மாணவர் அறக்கட்டளையின் சார்பாக மருத்துவர் சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் வேதரத்தினம், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கவிஞர் செம்போடை.குணசேகரன்,
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மதியழகன் மற்றும் பொருளாளர் ஜெகநாதன் பள்ளி மேலாண்மை குழுத் தலைவி அனிதா பள்ளியின் ஓவிய ஆசிரியர் . நாகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
முதுகலைத் தமிழாசிரியர் கி.சாந்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இயற்பியல் ஆசிரியர் சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். பட்டதாரி தமிழ் ஆசிரியர் பவானி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
பள்ளியின் முன்னாள் மாணவரும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற வருமான புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்
பன்னிரண்டாம் வகுப்பில் அரசு பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த விஷால் (583/600) மற்றும் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் மூன்றாவது இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற அஸ்மிதாவை (496/500) போலவும் அனைத்து மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த அஸ்மிதாவிற்கு தலைமை ஆசிரியர் ஆ.இளங்கோவன் ரூபாய் பத்தாயிரம்(10,000 )வழங்கிப் பாராட்டினார்
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வெ. குணசேகரன் அவர்களும் மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்