சேமிப்பு ...அவசியம் ...
சேமிப்பு ...அவசியம் ...
இன்றைய காலச்சூழலில் ஆண்களும் சரி… பெண்களும் சரி… இன்று எல்லோரும் கடுமையாக உழைக்கிரீர்கள்
ஆனால்… கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை முழுவதையும் ஆடம்பரத்திற்காக செலவு செய்து விடாதீர்கள்.
நீங்கள் உழைக்கும் காலத்திலேயே உங்களுக்கென்று ஒரு தொகையை தனியாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நம் உடல் எப்போதும் இதே வேகத்தில் உழைக்கும் என்று சொல்ல முடியாது… அதேபோல், இன்றிருக்கும் வருமானம் நாளையும் இருக்கும் என்று சொல்ல முடியாது.
நீங்க 500 ரூபாய் சம்பாதித்தால், முடிந்தால் 100 ரூபாயையாவது உங்களுக்காக ஒதுக்கி வையுங்கள்.
உங்கள் கையில் பணம் இருந்தால், ஒவ்வொரு சிறிய தேவைக்கும் யாரையும் எதிர்பார்த்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
கணவன் சம்பாதிக்கும் பணத்தை முழுவதும் மனைவியிடம் கொடுத்துவிட்டு, தனது தேவைக்கே பணம் கேட்க வேண்டிய நிலையும் வேண்டாம்…
மனைவி சம்பாதித்த பணத்தை முழுவதும் குடும்பத்திற்காக கொடுத்துவிட்டு, தனது விருப்பத்திற்காக ஒரு பொருள் வாங்க கணவரிடம் கேட்க வேண்டிய நிலையும் வேண்டாம்…
கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும்… குடும்பத்திற்கான பொறுப்பு ஒருபுறம் இருக்கட்டும்; உங்களுக்கென்று ஒரு சிறிய சேமிப்பும் இருக்கட்டும்.
சேமிப்பு என்பது யாரையும் நம்பாமல் இருப்பதற்காக அல்ல… எந்த நேரத்திலும் யாருக்கும் பாரமாகிவிடாமல் இருப்பதற்காக.
சம்பாதிக்கும் காலத்தில் முடிந்த அளவு கொஞ்சமாவது சேமித்து வையுங்கள்…
ஏனென்றால், இன்று நாம் சம்பாதிக்கும் பணம் நாளை நமக்கு பாதுகாப்பாக இருக்கலாம்..