சேலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் அக்டோபர் 4
சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக வெள்ளிக்கிழமை மாலை சேலம் கோட்டை மைதானத்தில் மேற்கு மாவட்ட தலைவர் செரிப் பாஷா தலைமையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகத்தின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ,அவரது பதவி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் சக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பு கடிதம் தொடர்பான செய்தி, தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கைகளில் வெளிப்படுத்தல் காணப்படவில்லை என்பதை தோலுரித்து காட்டியிருந்தது. மேலும் சக ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சாந்து மற்றும் டாக்டர் ஜோஷி ஆகியோரின் ஒப்புதலோ அல்லது ஆலோசனையை இன்றி தலைமை தேர்தல் ஆணையரால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர் சேர்க்கை நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட விதிகள் மாற்றம் உள்ளிட்ட அனைத்து உத்தரவுகளின் விதி மாற்றங்களை தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்,ட நிர்வாகிகள் ரஃபி முகமது முஸ்தபா கே. ரிஸ்வான், சேக் மூஷா ,மேட்டூர் பைரோஸ் வர்த்தக அணி கே.ஆர்.பாபு வடக்கு தொகுதி தலைவர் நவ்ஷாத் மேற்கு தொகுதி தலைவர் சையது இப்ராஹிம் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கலந்து கொண்டனர்.