Loading...

நத்தம் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் தயாரித்த பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி

A

Admin

November 08, 2026 • 03:18 AM

நத்தம் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் தயாரித்த பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி

நத்தம் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள்
தயாரித்த பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி

கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நத்தம் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவினர்கள் தயாரித்த பாரம்பரிய சிறுதானிய உணவு போட்டி நடைபெற்றது.
கமுதி அருகே நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி நடைபெற்றது. இந்த வாழ்வாதார இயக்கத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த ஏராளனமான பெண்கள் கலந்து கொண்டு, 100 வகையான சிறுதானிய உணவு வகைகள் தயாரித்து உணவு திருவிழா கண்காட்சி
போல் வைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு அரசு
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தனசேகர் தலைமை தாங்கி, உணவு திருவிழா போட்டியை துவக்கி வைத்தார்.மேலும்
ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானிய உணவு வகைகளின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் மயில்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இப் போட்டியில் எள்ளுருண்டை, வாழைப்பூ வடை, கேழ்வரகு அடை, உளுந்துகஞ்சி, சோள உப்புமா, கப்பங்கஞ்சி,
குதிரைவாலி அரிசி சோறு, கேழ்வரகுகளி, திணை மாவு, வரகுஅரிசிபாயாசம், குதிரைவாலி தேங்காய் சாதம், வாழைக்காய் புட்டு, கருப்புகவுனி பணியாரம், வரகு பிரியாணி, ராகி அடை, உளுந்து பாயாசம், பச்சை பயறு தோசை, ராகி சிமிலி, கேழ்வரகு சேவு,
கோதுமை சுவியம், கம்பு அரிசி லட்டு, கேழ்வரகு இடியாப்பம், திணை உப்புமா உட்பட
பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள்,பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சமைத்து கண்காட்சியில் வைத்திருந்தனர். கண் காட்சியாக வைக்கப்பட்ட இந்த உணவுகளின் சத்துகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துரித உணவுகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, குழந்தை களின் வளர்ச்சிக்காகவும், சக்திக்காகவும் பாரம்பரிய உணவுகள் உட்கொள்வதை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் இந்த உணவு திருவிழாவை ஏற்பாடு செய்யப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்
பில்லத்தியான்
செய்திருந்தார். இந்த
சிறுதானிய உணவு போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப் பட்டது. இறுதியில் கணக்காளர் பொன்மணி,
சுய உதவிக் குழு பயிற்றுநர் சங்கீதா நன்றி கூறினர் . இதேபோல்
உடையநாதபுரம் அச்சங்குளம், புனவாசல், வங்காருபுரம், சடையனேந்தல், பசும்பொன் , நகரத்தார் குறிச்சி, தரைக்குடி, பாப்பனம் ஆகிய கிராமத்தில் இந்த சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி நடைபெற்றது

- Advertisement -