Loading...

ராமநாதபுரத்தில் வாழ்த்துகளோடு விடைபெறும் எஸ்பி

A

Admin

November 08, 2026 • 03:21 AM

ராமநாதபுரத்தில் வாழ்த்துகளோடு விடைபெறும் எஸ்பி

ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.என். ஹரி கிரண் பிரசாத் .  


ராமநாதபுரம் . . ராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராகபொறுப்பேற்கும் ஹரி கிரண் பிரசாத் இவர் 2016-ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். ஆந்திரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட இவர், எம்.டெக் பட்டம் பெற்றவர்.  

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP) தனது ஆரம்பக் களப்பணியைத் தொடங்கினார்.  

கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்தார்.பின்னர் 

ராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் (Coastal Security Group - CSG) காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.  

சென்னை பெருநகரக் காவல் துறையில் மயிலாப்பூர் துணை ஆணையர் (DCP - Mylapore) மற்றும் நலன் & நிர்வாகப் பிரிவு துணை ஆணையராகப் (DCP - Welfare & Estate) பணியாற்றியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்க வந்தபோது, தனது தாய் மற்றும் தந்தைக்கு சல்யூட் அடித்து ஆசி பெற்று பதவியேற்ற நிகழ்வு இணையத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தும், தனது 5 வயது மகனை அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து எளிய பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கன்னியாகுமரியில் 'Women Striking Force' என்ற சிறப்புப் பிரிவைத் தொடங்கி வெற்றிகரமாக வழிநடத்தினார்.  

கடலோர மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு மற்றும் ராமநாதபுரத்தின் கடலோரப் பாதுகாப்பு நுணுக்கங்களை ஏற்கனவே நன்கு அறிந்த அதிகாரியான இவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்கஉள்ளார் .

- Advertisement -