Loading...

ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.என். ஹரி கிரண் பிரசாத்

A

Admin

November 08, 2026 • 03:19 AM

ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ள  டி.என். ஹரி கிரண் பிரசாத்

ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.என். ஹரி கிரண் பிரசாத் .

ராமநாதபுரம் . . ராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராகபொறுப்பேற்கும் ஹரி கிரண் பிரசாத் இவர் 2016-ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். ஆந்திரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட இவர், எம்.டெக் பட்டம் பெற்றவர்.
​திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP) தனது ஆரம்பக் களப்பணியைத் தொடங்கினார்.
​கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்தார்.பின்னர்
​ராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் (Coastal Security Group - CSG) காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
​சென்னை பெருநகரக் காவல் துறையில் மயிலாப்பூர் துணை ஆணையர் (DCP - Mylapore) மற்றும் நலன் & நிர்வாகப் பிரிவு துணை ஆணையராகப் (DCP - Welfare & Estate) பணியாற்றியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்க வந்தபோது, தனது தாய் மற்றும் தந்தைக்கு சல்யூட் அடித்து ஆசி பெற்று பதவியேற்ற நிகழ்வு இணையத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தும், தனது 5 வயது மகனை அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து எளிய பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கன்னியாகுமரியில் 'Women Striking Force' என்ற சிறப்புப் பிரிவைத் தொடங்கி வெற்றிகரமாக வழிநடத்தினார்.
​கடலோர மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு மற்றும் ராமநாதபுரத்தின் கடலோரப் பாதுகாப்பு நுணுக்கங்களை ஏற்கனவே நன்கு அறிந்த அதிகாரியான இவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்கஉள்ளார் .

- Advertisement -