Loading...

நேர்மைக்கு கிடைத்த வெற்றி...தென் காசியில் களம் இறங்கிய ஸ்டாலின் ஐ.பி.எஸ்., அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி

A

Admin

November 01, 2026 • 08:06 AM

நேர்மைக்கு கிடைத்த வெற்றி...தென் காசியில் களம் இறங்கிய ஸ்டாலின் ஐ.பி.எஸ்., அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி

நேர்மைக்கு கிடைத்த வெற்றி...தென் காசியில் களம் இறங்கிய ஸ்டாலின் ஐ.பி.எஸ்., அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி.... தென்காசி நவ :2 கன்னியாகுமாரி மாவட்டத்தில் கனிமவளகளை கொள்ளையடித்து கேரளாவுக்கு கடத்திய கனிமவள கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், கன்னியாகுமரி குமார் மாவட்டத்தில் இருந்த குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிய ஸ்டாலின் ஐ.பி.எஸ்., தென்காசி மாவட்ட எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டுள்ளதை தென்காசி மாவட்ட மக்கள் வரவேற்று கொண்டாடி வருவதை பார்க்க முடிகிறது. சுமார் 20 மாதங்கள் கண்ணனியாகுமாரி மாவட்ட எஸ் பி யாக பணியாற்றிய ஸ்டாலின் ஐ.பி.எஸ்.,அந்த மாவட்ட மக்களின் மனதை வென்ற காவல் துறையாக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர், ரவுடிகள், கஞ்சா விற்பனை கும்பல் மீது பாரபட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுத்து, கன்னியாகுமரியில் அமைதியை நிலைநாட்டியவர் ஸ்டாலின் எஸ் பி. காவல் துறை கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டும் என்றால், மக்கள் ஒரு வித பதற்றத்துடனே தான் காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு செல்வார்கள், ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றிய ஸ்டாலின் எஸ் பி யை மக்கள் ஒரு முறை சிந்தித்தாலே, காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் வகையில் மக்களின் அனுசரணையுடன் அவர்களின் குறைகளை கேட்க கூடியவர் ஸ்டாலின் ஐ.பி.எஸ்., சாமானிய மக்கள் குறுச்செய்தி மூலம் அனுப்பும் புகாரை, இரவு - பகல் பாராமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கூடியவர் ஸ்டாலின் எஸ் பி என்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்கள், எந்த ஒரு சிபாரிசு இல்லாமல் எஸ் பியை நேரடியாக சென்று மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் மிக எளிமையாகவே கன்னியகுமாரி மாவட்ட எஸ் பி யாக இருந்திருக்கிறார் ஸ்டாலின் ஐ பி எஸ். ஒருவர் இவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருக்கிறார் என்பது பெருமை இல்லை, கவுரவம் இல்லை, எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், சாமானிய மக்களுக்கு செவி சாய்ப்பது தான் , அந்த அதிகாரத்திற்கே பெருமை, அப்படி கன்னியாகுமரி மக்களின் பெருமைக்குரியவராக திகழ்ந்தவர் தான் ஸ்டாலின் IPS . இந்நிலையில் தற்பொழுது தென்காசி எஸ் பி யாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டாலின் ஐபிஎஸ். அங்கே பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் பாஸ்போர்ட் விசாரணையை, மற்றும் மற்ற பணிகளுக்கு காவல்துறையில் பணியாற்ற கூடியவர்கள் அலைக்கழிக்காமல் உரிய நேரத்தில் மக்களுக்கு சேவை செய்வதை உறுதி படுத்த வேண்டும், காவல் துறைக்கும் மக்களுக்கு இடையில் எப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல அணுகும் நிலையை உருவாக்கினாரோ, அதே போன்று தென் காசி மாவட்டத்தில் ஸ்டாலின் ஐபிஎஸ் உருவாக்குவார் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தென்காசி மக்கள். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ் பி யாக பணியாற்றிய ஸ்டாலின் ஐ.பி.எஸ்.,அந்த மாவட்டத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட போது, கன்னியகுமாரி மாவட்ட மக்கள் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து வந்தனர், ஆனால் தற்பொழுது, தென்காசி மாவட்ட எஸ் பி யாக நியமிக்கப்பட்டுள்ளது , தங்களின் அண்டை மாவட்டமான தென் காசி மாவட்டத்திற்கு ஸ்டாலின் ஐ.பி.எஸ்., Iநியமிக்கப்பட்டுள்ளார் என மகிழ்ச்சியை தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.

- Advertisement -