மதுரையில் பாரதி புகழ் பன்னாட்டு மாநாடு – நூல் வெளியீட்டு விழா
மதுரையில் பாரதி புகழ் பன்னாட்டு மாநாடு – நூல் வெளியீட்டு விழா
மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப்பள்ளி ரமணா அரங்கில், தென்சென்னைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதி புகழ் பன்னாட்டு மாநாடு மற்றும் மகாகவி பாரதியாரின் “பெரிய கடவுள்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கவிஞர் திரு கோகுலன் ஆனந்தா வரவேற்புரை நிகழ்த்தினார்,முணைவர் வி. வெங்கட்ராமன் தலமையுரையாற்றினார், கவிஞர் தேவகி ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்,கவிஞர் விஜயராணி மீனாட்சி அவர்கள் புத்தகத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்,பள்ளித் தலைமை ஆசிரியர் கே.எஸ். நாராயணன் தொடக்கவுரையாற்றினார். தென்சென்னைத் தமிழ்ச் சங்கத் தலைவர் மருத்துவர் பாரதி ஜீவரேகா ஏற்புரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து ஞான ரதம் கண்ட ஞானச்செருக்கன்வெளியிடுபவர் முணவர்.ஜெ. மகேஸ்வரன்பெற்றுக்கொள்பவர் எழுத்தாளர்.வே. எழிலரசுஅவர்கள்.சென்னை கூடுதல் வணிக வரித்துறை ஆணையர் கவிஞர் தேவேந்திரபூபதி பெரிய கடவுள் நூலை வெளியிட்டார்
ஆசிரியை கவிஞர் காந்திமதி மகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்
விழாவில் கவிஞர் பாரதி முத்துநாயகம், எழுத்தாளர் சரவணன் செந்தில்முருகன், கவிஞர் சீ. விஜயலட்சுமி, முருகேசன், முனைவர் கலாவதி, முனைவர் சப்ரா பிபி அல் அமீன், கவிஞர் வசந்தி நடராசன், உள்ளிட்டோர் பங்கேற்று பாரதியாரின் இலக்கியப் படைப்புகள், முற்போக்குச் சிந்தனைகள் மற்றும் சமூகப் பார்வைகள் குறித்துச் சிறப்புரையாற்றினர்.
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், சிறப்பாகக் கலை நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.ஆசிரியர் தமிழ்ச்செல்வன் முதுகலை ஆசிரியர் திரு. முரளிதரன் மாணவர்களை வழிநடத்தினர்,விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தென்சென்னைத் தமிழ்ச் சங்கத்தினர் செய்திருந்தனர் நன்றியுரைதென் சென்னை தமிழ்ச்சங்க பொருளாளர் கிருபாகரன் வழங்கினார் இறுதியில் நாட்டுப்பண் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.