மரகதம் குமரவேல் விஜய்யின் தங்கை: புஸ்ஸி ஆனந்த் பேச்சு
மரகதம் குமரவேல் விஜய்யின் தங்கை: புஸ்ஸி ஆனந்த் பேச்சு
மதுராந்தகம் செப் 26
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க .,வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீஸார் இருந்தனர் .
மரகதம் குமரவேல் சிறந்த வேட்பாளர்.. சிறந்த சகோதரி.. மதுராந்தகம் பிரச்சாரத்தின் போது, இந்தியாவுக்கு 1947லேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டிற்கு 2026ல் தான் சுதந்திரம் கிடைத்தது என்று மூதாட்டி ஒருவர் கூறினார். மதுராந்தகம் தொகுதியின் காப்பாளர் மரகதம் குமரவேல். அவர் விஜய்யின் தங்கை என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்:என்றார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்
த.வெ.க ., கூட்டத்தின் மேடைக்கு முதல்வர் விஜய் வந்தவுடன் த.வெ.க ., கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது . அதேபோல் தவெகவின் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை விஜய் அறிமுகம் செய்து வைத்தார் . மதுராந்தகம் தொகுதிக்கு வந்த விஜய்க்கு வேல் கொடுத்து மரகதம் குமரவேல் வரவேற்றார் .
மதுராந்தகம் அருகே ஆத்தூர் பகுதியில் தவெக கூட்டம் நடக்கும் திடலுக்கு முதல்வர் விஜய் வந்துவுடன் அவருக்கு அமைச்சர்கள் மரிய வில்சன், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனர்.
மதுராந்தகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் விஜய் தொடங்கினார.விஜய் வரும் வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
முதல்வர் விஜய் மீண்டும் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்த வேனில் இருந்து இறங்கி வந்த முதல்வர் விஜய்யை, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வரவேற்றார்.
கரூர் சம்பவத்தை போல் மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக போலீசார் குவிக்கப்பட்டுறிந்தனர
செங்கல்பட்டு, திருவள்ளூர் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். காவல்துறையினர் பலரும் சீருடையின்றியும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முதல்வர் விஜய்யின் பிரச்சாரத்தில் பங்கேற்போருக்கு கூல் டிரிங்ஸ், மிக்சர் உள்ளிட்ட ஸ்னாக்ஸ் பையுடன் விசிலும் கொடுக்கப்பட்டன. முதல்வர் விஜய்யை காண 5 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் குவிந்தனர். .