Loading...

வீரமங்கை குயிலியின் 246-வது வீர வணக்க நாள் அனுசரிப்பு

A

Admin

October 21, 2026 • 01:49 PM

வீரமங்கை குயிலியின் 246-வது வீர வணக்க நாள் அனுசரிப்பு

வீரமங்கை குயிலியின் 246-வது வீர வணக்க நாள்

அனுசரிப்பு 


குயிலியின் 

சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!



திருப்புவனம் அக் 22 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிநகரத்தில் 

வீரத்தாய் குயிலி பெண்கள் முன்னேற்றம் அறக்கட்டளை சார்பில் 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்த வீரமங்கை குயிலியின் 246-வது ஆண்டு வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது  


இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் பங்கேற்று வீரமங்கை குயிலியின் தியாகத்தை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தி  

ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிப்பதற்காக தனது உடலில் தீ வைத்துக் கொண்டு உயிர்த்தியாகம் செய்ததாக கூறப்படும் வீரமங்கை குயிலியின் வீர வரலாறு குறித்து எடுத்துரைத்தனர். 


அதன் பின்னர் 

வீரமங்கையின் வீரத்தையும் தியாகத்தையும் எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசு சார்பில் குயிலிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.


இந்த நிகழ்வில்  

அறக்கட்டளை தலைவர் 

குயிலி அய்யனார்  

ஒண்டிவீரன் நெல் கட்டும் சேவல் 

எம் ஆறுமுகம் மற்றும் 

சமூக விடுதலைக் கட்சி மாநில தலைவர் 

ஆறுமுகம் சமூக ஆர்வலர்கள் கோவை 

குயிலி சித்ரா, லட்சுமணன், ஆகியோர் உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -